திருக்காட்டுப்பள்ளி அருகே மாட்டுவண்டி குதிரை வண்டி பந்தயம்

திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காட்டில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, கரிச்சான்மாடு, பூச்சிட்டுமாடு, மற்றும் குதிரை வண்டிகள் பங்கேற்றன. நேமம் கல்லணை பிரதான சாலையில் நடந்த இந்தப் பந்தயத்தை தஞ்சை எம்.பி. ச. முரசொலி, திருவையாறு எம்.எல்.ஏ. துரை. சந்திரசேகரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கல்லணை செல்லக் கண்ணு ஆகியோர் தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி