தஞ்சாவூர் அருகே, ஆற்றில் மூழ்கிய முதியவர் சடலமாக மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம், தெற்கு வாண்டையார் இருப்பு பகுதியை சேர்ந்த விவசாயி சக்திவேல் (60), கடந்த 17ம் தேதி மாலை கல்யாணஓடை ஆற்றில் குளிக்கச் சென்றபோது, அதிக தண்ணீர் வேகத்தால் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். குடும்பத்தினர் தேடியபோது அவர் காணாமல் போனது தெரியவந்தது. 18ம் தேதி துறையூர் அருகே ஆற்றின் கரையோரம் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் மற்றும் உறவினர்கள் அடையாளம் காட்டியதை அடுத்து, சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி