கோவில்பத்து தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி சுசீலா (50). பழனிச்சாமி குடும்பத்துக்கும், அவரது சகோதரர் அன்பு குடும்பத்துக்கும் இடப்பிரச்சனை காரணமாக முன் விரோதம் உள்ளது. இந்நிலையில் பழைய வீட்டில் விறகு எடுக்கச் சென்ற சுசீலாவை அன்பு மகன் அசோக்குமார் (20) தகாத வார்த்தைகளால் திட்டி, விறகுக் கட்டையால் தாக்கினாராம்.
இதில் பலத்த காயமடைந்த சுசீலா தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் பூதலூர் சார்பு ஆய்வாளர் சூர்யா வழக்குப்பதிந்து அசோக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.