த வெ கழக தஞ்சை வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் நியமனம்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றி கழகம் தனது முதல் கட்டமாக தொண்டரணி, மாணவரணி, இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகளை நியமித்துள்ளது. தஞ்சை வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளராக ஜெயமணி கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். இத்துடன் 10 இணை அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து, கட்சி பணிகளை கட்சி உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். புதிய நிர்வாகிகள் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம் அலி மற்றும் பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அசாருதீன் உதுமான் அலி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தொடர்புடைய செய்தி