தஞ்சாவூர்: முதலமைச்சரை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை; அா்ஜூன் சம்பத்

கும்பகோணத்தில் மாசிமக தீர்த்தவாரியில்  அா்ஜூன் சம்பத் கலந்துகொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்; பிராமணர், அர்ச்சகர், வைதீகர் என அனைத்து சமூகத்தையும் ஒன்றிணைத்து அந்தணர், ஆலயம், ஆகமம் என்ற தலைப்பில் ஒருங்கிணைந்த ஒற்றுமை மாநாடு, பேரணி, பொதுக்கூட்டம் வரும் மார்ச் 23-இல் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படுகிறது. 

கடவுள் மறுப்பு கொள்கையை கொண்ட சிலர் பிரித்தாளும் நிலையை கையாளுகின்றனர். பிராமணர் சமுதாயம் மீது கேலி, கிண்டல் தொடர்கிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வரை சந்திக்க தேதி கேட்டும் கிடைக்கவில்லை. மாநாடு தீர்மானங்களை கொண்டு பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்க இருக்கிறோம் என்றார். அப்போது, மாநில பொதுச்செயலர் குருமூர்த்தி உடனிருந்தார்.

தொடர்புடைய செய்தி