இதையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட வயலை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயசீலன், விதை சான்று உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், திருவையாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் லதா, விதை ஆய்வாளர் சத்யா, விதை சான்று அலுவலர் மணிமேகலை ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயியிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், வேளாண்மை விரிவாக்க மையத்தில் வாங்கிய விதை நெல்லுடன் தனியார் உரக்கடையில் வாங்கிய 30 கிலோ விதை நெல்லையும் சேர்த்து விவசாயி நாற்று விட்டுள்ளார். குறுகிய கால ரகமான கோ 51ஐ 18 முதல் 22 நாட்களுக்குள் நடவு செய்ய வேண்டும். இவர் 32 நாட்களில் நடவு செய்துள்ளார். வயதான நாற்றுகளை நடவு செய்ததாலும், நீர் மேலாண்மை இல்லாமையாலும், காலநிலை காரணமாகவும் ஒன்று, இரண்டு கதிர்கள் வெளிவந்துள்ளன. பிறரக கலப்பு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.