சமூக பதட்டத்தை ஏற்படுத்திய அண்ணாமலை மீது நடவடிக்கை: உ. வாசுகி

தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் உ. வாசுகி செய்தியாளர்களிடம் பேசுகையில், மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள சார்ஜ் ஷீட்டில் மாணவி மரணத்திற்கு மத மாற்றம் காரணம் அல்ல என தெரிவித்துள்ளது. எனவே, மாணவி மரணத்தின் போது அப்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சங்பரிவார் மத அமைப்புகள் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மதமாற்றம் தான் மாணவி தற்கொலைக்கு காரணம் என்று பேசியதாக அவர் கூறினார். தற்போது நிலைமை தெளிவுபடுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உ. வாசுகி வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி