திருக்கனூர்பட்டில் ரவுண்டானா அமைக்க வேண்டும்

தஞ்சாவூர் அடுத்த திருக்கனூர்பட்டி பகுதியில் நான்கு சாலை பிரியும் இடத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பகுதி வழியாக வல்லம், தஞ்சாவூர் நகர், புதுக்கோட்டை, மன்னார்குடி செல்ல முடியும். தினமும் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. மாவட்ட நிர்வாகம் ரவுண்டானா அமைத்து விபத்துகளைத் தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி