தஞ்சாவூா் மாதாகோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், சுமார் 700 காளைகளைப் பிடிக்க 400 வீரர்கள் களமிறக்கப்பட்டனர். இப்போட்டியில் மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 35 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 17 பேர் தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.