திருவையாறு பைக் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது

திருவையாறு தாலுகா அலுவலகம் அருகே டிஎஸ்பி அருள்மொழி மேற்பார்வையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்தபோது, அதை நிறுத்தாமல் சென்றவர்களை துரத்திப் பிடித்தனர். விசாரணையில், பொன்னாவரையைச் சேர்ந்த ஈஸ்வர் (21), நடுக்கடையைச் சேர்ந்த சச்சின் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறுவன் உட்பட மூவரையும் திருவையாறு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி