தஞ்சையில் இருந்து தேனிக்கு 1250 டன் அரிசி அனுப்பி வைப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் இருந்து, பொது விநியோகத் திட்டத்திற்காக 1,250 டன் அரிசி 21 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம் தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அரவைப் பணிகளுக்காக 2,000 டன் நெல் மூட்டைகள் 42 வேகன்களில் திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. லாரிகள் மூலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்த அரிசி மற்றும் நெல் மூட்டைகள், தமிழகத்தின் ரேஷன் விநியோகத் தேவையைப் பூர்த்தி செய்யப் பயன்படும்.

தொடர்புடைய செய்தி