தஞ்சாவூர் அருகே கீழவஸ்தாசாவடி பகுதியில் பழனிவேலு (28) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, தஞ்சாவூர் நோக்கி வந்த சரக்கு வேன் மோதி தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே பழனிவேலு உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.