தஞ்சாவூரைச் சேர்ந்த அனீஷ் பாத்திமா (38) புதன்கிழமை அன்று தன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். கணவரைப் பிரிந்து காலணி கடை நடத்தி வந்த இவர், தன் மகள்களைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பிய நிலையில், பிற்பகலில் உறவினர் ஒருவர் வந்து பார்த்தபோது படுக்கை அறையில் சடலமாகக் கிடந்துள்ளார். மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.