தஞ்சாவூர்: வீட்டில் சிலிண்டர் வெடித்து இளம்பெண் சாவு

வீட்டில் சமையல் செய்யும்போது கியாஸ் சிலிண்டர் வெடித்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் ஹரீஷ் செல்போன் சர்வீஸ் செய்யும் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கீர்த்திகா (வயது 27) இவர்களுக்குதிருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த கீர்த்திகா சமையல் செய்து கொண்டு இருந்தார். 

அப்போது சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து வெடித்தது. இதில் அவருடைய உடலில் தீப்பற்றி எரிந்தது. உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அவர் அலறிதுடித்துள்ளார்.அவருடைய அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக பற்றி எரிந்த தீயை அணைத்து உயிருக்கு போராடிய கீர்த்திகாவை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பெற்று வந்த கீர்த்திகா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி