தஞ்சை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - கலெக்டர்

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். பொதுப்பிரிவினர் 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் 1 ஆண்டும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பூர்த்தியடைந்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் https://tnvelaivaaippu.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி