தஞ்சாவூரில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பிரியங்கா, ஆணையத் துணைத் தலைவர் இமயம், ஆணைய உறுப்பினர்கள் ஆனந்தராஜா, இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாட்கோ மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் 182 பேருக்கு 3 கோடியே 52 லட்சத்து 40 ஆயிரத்து 440 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநில ஆணைய தலைவர் முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் வழங்கினார்.