தஞ்சாவூர்: செங்கிப்பட்டியில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டின் ஒரே பிரதிநிதியாக, உண்மையான பிரதிநிதியாக நாம் இருக்கிறோம் என வேலூரில் பேசியிருந்தேன். அதை திரித்து பேச ஆரம்பித்துவிட்டனர். தமிழ்நாட்டை காப்பாற்றுவது திமுக என சொல்வதெல்லாம் ஒர்க்அவுட் ஆகாது. சிறுவர்கள் கூட ஒம் சக்தி, பராசக்தி, திமுக தீயசக்தி என்று கூறுகிறார்கள். கிரிக்கெட்டில் கூட டெல்லி அணியால் தமிழ்நாடு அணியை வீழ்த்த முடியாது. கிரிக்கெட்டில் சிஎஸ்கே-வுக்கு விசில் போடுவது போல், தேர்தலில் தவெக விசில் அடிக்கும் என்றார்.