நொய்டாவில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளையும் விடுதலை செய்ய வேண்டும். விவசாயிகள் சங்கத் தலைவர் ஜகுத்சிங் தலேவால் 20 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர அனைத்து விவசாயிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். விவசாயிகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள், நகல் எரிப்பு போராட்டத்தில் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், சிபிஐ மாவட்டச் செயலாளர் முத்து உத்திராபதி பங்கேற்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?