தஞ்சாவூர் அருகே மருங்குளம் சென்றுவிட்டு பாக்கியராஜ், ஜெயச்சந்திரன், ரவி ஆகியோர் ஒரே பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, குருங்குளம் கிடாவெட்டு விழாவில் மது அருந்திவிட்டு அதிவேகமாக பைக் ஓட்டி வந்த தருண், அபியுத் ஆகிய இளைஞர்கள், அருமலை வளைவில் பாக்கியராஜின் பைக் மீது நேருக்கு நேர் மோதினர். இந்த விபத்தில் பாக்கியராஜ், ஜெயச்சந்திரன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். காயமடைந்த மற்ற மூவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.