தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 13 உதவி இயக்குநர்களுக்கு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையில் பணியாற்ற பயிற்சி அளிக்கப்பட்டது. துணைவேந்தர் குழு உறுப்பினர் பெ. பாரதஜோதி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். பதிவாளர் (பொ) கோ. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். தணிக்கைத் துறை ஓய்வு பெற்ற இணை இயக்குநர் சி. பாலன், தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் பயிற்சி அளித்தனர். தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குநர் சபீர்பானு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.