தஞ்சாவூர் அருகே வல்லம் பிரிவு சாலையில் ஸ்கூட்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த விவசாயி மகாலிங்கம் (67), அவரது மனைவி மகாலட்சுமி (62) மீது, கேரளாவிலிருந்து வந்த கார் மோதியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். வல்லம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டி வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அர்ஜுன் (23) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.