தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நேற்று (மே 16) இன்வெர்ட்டர் அறையில் இருந்து பயங்கர புகை மூட்டம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து விரைந்து வந்த திருவையாறு தீயணைப்பு படை வீரர்கள், வங்கியின் மின்சாரத்தை உடனடியாக துண்டித்து, புகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.