தஞ்சாவூர்: நீதிமன்ற ஊழியர் வீட்டில் திருட்டு

தஞ்சாவூர் அருகே நீதிமன்ற ஊழியர் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. கடந்த 7ஆம் தேதி இரவு வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்குச் சென்ற கணேசன் (39) என்பவர், 9ஆம் தேதி வீடு திரும்பியபோது முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த 1 பவுன் நகை மற்றும் ரூ. 3000 ரொக்கம் திருடு போனது. இது குறித்து புகாரளித்ததை அடுத்து, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி