தஞ்சை: மதுக்கடைகளை மூட வேண்டும் என மகளிர் ஆயம் வலியுறுத்தல்

தஞ்சையில் நடந்த மகளிர் ஆய செயற்குழு கூட்டத்தில், தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும் என தலைவர் செ. அருணா வலியுறுத்தினார். 717 கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பில் தெளிவில்லை என்றும், போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என்றும் கோரினார். மேலும், பாலியல் வன்கொடுமை வழக்குகளுக்கு 6 மாதத்தில் தீர்ப்பளிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும், மேக்கேதாட்டு அணை கட்டினால் போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி