தஞ்சாவூர்: தவெக கூட்டத்தில் விஜய், சங்கீதா புகைப்படம்

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று (ஜன.4) நடைபெறுகிறது. இதனிடையே கூட்டம் நடைபெறும் இடத்தில் விஜய், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தொண்டர் ஒருவர் கையில் உயர்த்தி பிடித்தபடி நின்றிருந்தார். இதுதொடர்பான காட்சிகள் வைரலாகி வருகிறது. கடந்த வாரம் விஜயிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி