தஞ்சை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ விஜய் சரவணன், வெற்றி கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு கும்மாளம் அடித்ததாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து தவெக நிர்வாகிகளிடம் கேட்டபோது, இது பழைய வீடியோ என்றும், யாரோ வேண்டுமென்றே இதை வெளியிட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.