தஞ்சாவூர் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் தவெக வேட்பாளர் ஆர். விஜயசரவணன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இரண்டாமிடம் பெற்றார். மேலும், பாஜக வேட்பாளர் எம். முருகானந்தம் உட்பட போட்டியிட்ட 11 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். தஞ்சாவூர் தொகுதியில் மொத்தம் உள்ள 2,52,676 வாக்குகளில் 1,99,040 வாக்குகள் பதிவாகின. 24 சுற்றுகள் முடிவில் ஆர். விஜயசரவணன் 87,705 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார்.