தஞ்சை மாணவி தற்கொலை.. கல்லூரி மாணவர் கைது

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் செவிலியர் படிப்பு படித்து வந்த தருமபுரி மாணவி, கவின் (22) என்ற மாணவருடன் காதலித்து வந்துள்ளார். பெற்றோரின் எதிர்ப்பு காரணமாக காதலை கைவிடுவதாக மாணவி கூறியதால், ஆத்திரமடைந்த கவின், மாணவியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கவினை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி