தஞ்சாவூர்: ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் கண்டிப்பான உத்தரவு

தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் அனைவரும் தினமும் காலை 10 மணிக்குள் கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று உதவி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அலுவலக நேரத்தின் போது வெளியில் சென்றால் தகவல் பலகையில் பதிவிட வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை முறையாகவும், கனிவாகவும் நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்ட கோரிக்கைகளுக்கு 3 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி