தஞ்சாவூர்: மேலவீதி கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூர் மேலவீதி சங்கரநாராயணன் கோயிலில் வைகாசி மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மேலும், மே 26-ம் தேதி நடைபெறவுள்ள குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளுக்கான விசேஷ ஹோமமும், பரிகார அர்ச்சனைகளும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி