தஞ்சாவூர்: குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானம் எதிரே உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. எனவே அதனை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை பழைய நீதிமன்ற சாலையில் உள்ள ஆயுதப்படை மைதானம் எதிரே செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்த சாலை வழியில் தான் கும்பகோணத்தில் இருந்து வரும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையம் சென்று வருகிறது. மேலும் அந்த வழியாகத் தான் தஞ்சை பெரிய கோவில், சீனிவாசபுரம், மேம்பாலம், மருத்துவக் கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. அந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சரிசெய்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி