தஞ்சாவூர்: ஆட்சியரிடம் 498 மனுக்களை வழங்கிய பொதுமக்கள்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 498 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கினர். மனுக்கள் மீது உரிய தகுதியின் அடிப்படையில் விரைவாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி