தஞ்சை காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் கடும் கோடை வெப்பம் மற்றும் நீர்ப்பற்றாக்குறை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால், கடந்த வாரம் ரூ. 100-க்கு விற்ற அவரைக்காய் விலை நேற்று திடீரென உயர்ந்து கிலோ ரூ. 120 முதல் ரூ. 130 வரை விற்பனையானது. இதேபோல் பீன்ஸ் கிலோ ரூ. 100 மற்றும் இஞ்சி கிலோ ரூ. 140-க்கும் விற்பனை செய்யப்பட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு நுகர்வோரை பெரிதும் பாதித்துள்ளது.