தஞ்சாவூர்: விஜய் கூட்டம்.. 32 கேள்வி எழுப்பிய போலீஸ்

தஞ்சாவூர் மாவட்டம் அய்யாசாமிப்பட்டியில் வரும் மார்ச் 4-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 4,900 பேர் பங்கேற்கவுள்ள இக்கூட்டம் தொடர்பாக, பாதுகாப்பு காரணங்களுக்காகப் போலீசார் தரப்பில் 32 கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கு கட்சி நிர்வாகிகள் இன்று அளிக்கும் பதிலைப் பொறுத்தே கூட்டத்திற்கு அனுமதி வழங்குவது குறித்துப் போலீசார் இறுதி முடிவு எடுப்பார்கள் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்தி