தஞ்சாவூர் பயணி செங்கல்பட்டில் மாரடைப்பால் பலி

செங்கல்பட்டை அடுத்த டோல்கேட் அருகே அரசு பேருந்தில் சென்னை கிளாம்பாக்கம் நோக்கிச் சென்ற தஞ்சாவூரைச் சேர்ந்த மணிகண்டன் (27) என்பவர் திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்தார். பேருந்து உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி