தஞ்சை வடக்கு மாவட்டதிமுக ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள SIR சீராய்வை உடனடியாக கைவிடக் கோரியும், ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி எதேச்சதிகாரப் போக்குடன் செயல்படுவதைக் கண்டித்தும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நவம்பர் 11 அன்று தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து விவாதிக்க, 8/11/2025 அன்று தஞ்சாவூரில் INDIA கூட்டணி கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர். மாநகராட்சி துணை மேயர் சுப தமிழழகன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி