தஞ்சை: மதமாற்ற முயற்சி அல்ல; லாவண்யா தற்கொலை குறித்து சிபிஐ அறிக்கை

மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதமாற்ற முயற்சி காரணம் அல்ல என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கட்டாய மதமாற்றத்தால் தற்கொலை நிகழ்ந்ததாக குற்றம்சாட்டியிருந்தனர். நீண்ட நாட்களாக நீடித்த மதமாற்ற குற்றச்சாட்டுகளுக்கு சிபிஐ அறிக்கை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும், லாவண்யாவின் தந்தை, சித்தி ஆகியோர் பாஜக தலைவர்களின் நிர்பந்தத்தால் உடலை பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி