தஞ்சாவூர்: கிலோ ரூ. 20... மாங்காய் விலை கடும் வீழ்ச்சி

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தைக்கு திருவையாறு, கண்டியூர், சூரக்கோட்டை உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்த ஆண்டு மாங்காய் விளைச்சல் அதிகரித்து, சந்தைக்கு வரத்து உயர்ந்ததால் அதன் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. தற்போது ஒரு கிலோ மாங்காய் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், இல்லத்தரசிகள் ஊறுகாய் மற்றும் சமையல் தேவைகளுக்காக அதனை அதிக அளவில் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி