திருச்சியில் இருந்து கம்பத்திற்கு சென்ற அரசு பஸ் ஒன்றின் எல்.இ.டி. திரையில், கம்பம் என்பதற்கு பதிலாக 'தமிழக வெற்றிக்கழகம்' என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். சைபர் கிரைம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.