தஞ்சாவூர்: ஆளுநரின் நிபந்தனை சட்ட விரோதமானது: பெ. மணியரசன்

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன், 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். காங்கிரஸ் ஆதரவு அளித்த நிலையில், 118 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால்தான் அழைக்க முடியும் என ஆளுநர் அர்லேக்கர் நிபந்தனை விதிப்பது சட்டவிரோதமானது என்றும், இது உச்ச நீதிமன்றத்தின் 'எஸ். ஆர். பொம்மை' வழக்குத் தீர்ப்பிற்கு எதிரானது என்றும் அவர் கூறினார். பா. ஜ. க. வின் அரசியல் லாபத்திற்காக ஆளுநர் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், விஜய் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கக் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி