தஞ்சை அருகே நடந்த கோயில் விழாவிற்காக உறவினர் வீட்டிற்கு வந்திருந்த பிரதீப்கண்ணன் (24), அதே பகுதியில் பாட்டி வீட்டிற்கு வந்திருந்த 16 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், வல்லம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரதீப்கண்ணன் குற்றத்தை உறுதி செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.