தஞ்சாவூர்: முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், குறுவை சாகுபடி பணிகளுக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன. வாய்க்கால்களைத் தூர்வாருதல், உர இருப்பு, பயிர் கடன் தள்ளுபடி, நெல் மற்றும் கரும்புக்கு கூடுதல் விலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்த விவசாயிகள், கர்நாடகாவிலிருந்து பெற வேண்டிய காவிரி நீர் நிலுவையை உடனடியாகப் பெற்றுத் தரவும் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி