தஞ்சாவூர்: 4 ஆம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தஞ்சை மின்வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, மாதாந்திர நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 4 ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை வல்லம் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. மேற்பார்வை பொறியாளர் சித்ரா தலைமை வகித்து நுகர்வோரின் குறைகளை கேட்டறிகிறார். வல்லம், செங்கிப்பட்டி, கள்ளப்பெரம்பூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி உள்ளிட்ட புறநகர் பகுதி நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம்.

தொடர்புடைய செய்தி