தஞ்சாவூர் மாவட்டத்தில் ராபி பருவ உளுந்தை, கிலோ ரூ. 78 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் 4,000 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியான விவசாயிகள் தேவையான ஆவணங்களுடன் 11.05.2026 முதல் 09.07.2026 வரை தங்களைப் பதிவு செய்து, தொகையைத் தங்களது வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.