தஞ்சை மாவட்ட தேர்தல் முடிவுகள் - அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி

தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாமல் போனது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு ஆதரவாகச் செய்த திட்டங்கள் மற்றும் பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் கைகொடுக்கும் என நம்பப்பட்ட நிலையில், மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 6-ஐ திமுக கூட்டணியும், 2-ஐ தவெக-வும் கைப்பற்றியுள்ளன. பாதி இடங்களிலாவது வெற்றி பெறலாம் என்ற அதிமுக கூட்டணியின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி