தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக அண்ணாதுரை ஓய்வு பெற்றதை அடுத்து, பொறுப்பு அதிகாரியாக மாதவன் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், திருச்சி மாவட்ட கல்வி அலுவலராக (தனியார் பள்ளிகள்) பணியாற்றி வந்த பேபிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பேபி தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.