தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வணிக எரிவாயு விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ரயில்வே பணியிடக் குறைப்பைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், சிபிஐ மாவட்டச் செயலாளர் கோ. சக்திவேல், விசிக மாவட்டச் செயலாளர் இடிமுரசு இலக்குவணன் மற்றும் இடதுசாரி நிர்வாகிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.