தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு, நீட் தேர்வு முறைகேடு மற்றும் சிபிஐ இயக்குநரின் பதவி நீட்டிப்பைக் கண்டித்து மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்டத் தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதில் முன்னாள் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.