தஞ்சாவூர்: முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வு

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் திங்கள்கிழமை மாலை முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 1976-இல் தொடங்கப்பட்டு தற்போது பொன் விழா ஆண்டை எட்டியுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சாதனைகளை உலகம் அறியும் என்றும், இந்த பொன் விழா ஆண்டை உலகத் தமிழர்கள் கொண்டாட வேண்டும் என்றும் கூறினார். மேலும், மீண்டும் தமிழீழப் போர் தொடங்கும்போது அதற்கு அனைவரும் ஆதரவாகத் திரள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

தொடர்புடைய செய்தி