நேற்று காலை 11 மணிக்கு துவங்கி மதியம் 2. 30 வரை கொளுத்தும் வெயிலிலும் நின்று, நூற்றுக்கணக்கான மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம், மாணவர்களை தனது அலுவலக அறைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து, மாணவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை, உடனடியாக ஏற்றுக்கொண்டு சரி செய்து தருகிறோம் என்று உறுதியளித்தார். இதையேற்று மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. காத்திருப்பு போராட்டம் மற்றும் பேச்சுவார்த்தையில், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கு. சந்துரு, மாவட்டத் தலைவர் வே. அர்ஜுன், மாவட்டத் துணைச் செயலாளர் பிரேம்
மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.